உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
9. விருத்தி வகுத்தது |
|
வயந்தகன் றனக்கு வழக்குப்புற
மாகெனப் 35 பயம்படு நன்னகர் பதினொன்
றீத்து வைக
லாயிரங் கைவயிற் கொடுத்துப்
பிரியா துறைகென வருடலை நிறீஇ
|
|
(வயந்தகனுக்கு
அளித்தவை)
34 - 37 : வயந்தகன்.........நிறீஇ
|
|
(பொழிப்புரை) பின்னர் வயந்தக குமரனுக்குச் சீவிதப்
பொருளாகுக என்று பயன்மிக்க பதினொரு நகரங்களை வழங்கி நாளொன்றிற்கு ஆயிரம் பொன்
ஊதியமாகக் கையிற்கொடுத்து, நீ என்னைப் பிரியாமல் ஈண்டே இருப்பாயாக என்று அருளித்
தன்பால் நிறுத்திக்கொண்டு; என்க.
|
|
(விளக்கம்) வழக்குப் புறம் - சீவிதத்தின் பொருட்டு இறையிலியாக விடப்படும் நிலம். வைகல்
ஆயிரங் கொடுத்து - ஒவ்வொரு நாளும் ஆயிரம் ஆயிரம் பொன் ஊதியமாக
அளித்து.
|