உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
35 கட்டுரை மகளொடு
கரும நுனித்து
விட்டுரை விளங்கிய விழுப்புக
ழாளரும் கற்ற
நுண்டொழிற் கணக்கருந் திணைகளும்
காய்ந்த நோக்கிற் காவ
லாளரும் தேன்றார்
மார்பன் றிருநகர் முற்றத்துக் |
|
(இதுவுமது)
35 - 39 :
கருமம்...............முற்றத்து |
|
(பொழிப்புரை) காரியங்களைக் கூர்ந்தறிந்து பின்னர்
வெளிப்படுத்திக் கூறுவதன்கண் விளங்கிய சிறந்த புகழையுடையோரும் நுணுகிய கணிதத்
தொழில் கற்ற கணக்கர்களும் அதிகாரிகளும் சினந்த நோக்கினையுடைய காவலர்களும் தேன்
துளும்பும் மாலையணிந்த உதயணனுடைய அழகிய அரண்மனை முற்றத்தின்கண்; என்க. |
|
(விளக்கம்) னித்து - கூர்ந்துணர்ந்து. விட்டுரை - பிறர் வெளிப்படுத்திக் கூறும் புகழுமாம்.
நுண்தொழில் கற்ற கணக்கர் என்க. திணைகள் - அதிகாரிகள். காய்ந்த - சினந்த.
மார்பன் : உதயணன். நகர் - அரண்மனை. |