உரை |
|
3. மகத காண்டம் |
|
5. மண்ணூநீராட்டியது |
|
வாயில் போந்து வைய மேறிற்
95 சாய னோமெனத் தாயகட்
டெடுத்துப்
போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப் |
|
(பதுமாபதியைச்
செவிலித்தாய்
வண்டியேற்றுதல்)
94 - 96 : வாயில்............இருப்ப |
|
(பொழிப்புரை) அங்ஙனம்
இறங்கியவள் முற்றத்தே நடந்து வந்து வண்டியிலேறின் அவளுடைய
மென்மைத் தன்மையாலே பெரிதும் வருந்தாநிற்பள்
என்றுட்கொண்டு செவிலித்தாய் அவளைத் தன் வயிற்றிலே
அணைத்தெடுத்துக் கொடுபோய்த் தோழியர் வாழ்த்துக்கள் பலவுங் கூறாநிற்ப
வண்டியிலே ஏற்றுதலாலே பதுமாபதி வண்டியிலே அமர்ந்திராநிற்ப
என்க. |
|
(விளக்கம்) வையம் - வண்டி.
சாயல் - மென்மை. மென்மை யுடைமையாலே நோமென்க. தாய் - செவிலி.
தோழியர் போற்றுக் கூற என்க- அகட்டெடுத்து - வயிற்றிலணைத்
தெடுத்து. |