பக்கம் எண் :

பக்கம் எண்:712

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
         
    85    பழியி லொழுக்கிற் பதுமை யென்னும்
          கழிமதி மகளொடு கற்றோர் தெரிந்த
          கோல்வ லாளர் கொண்டனர் புக்குத்தம்
          கால்வல் லிவுளிக் காவலற் காட்டத்
 
                 (இதுவுமது)
             85 - 88 : பழி...........காட்ட
 
(பொழிப்புரை) உதயணனுடைய கற்றோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்ட பிரப்பங்கோல் ஏந்தும் காவலாளர் வசையில்லாத ஒழுக்கத்தையுடைய பதுமை என்னும் பேரறிவுடைய தூதியை அழைத்துக் கொடு போய் மாளிகையுட் புகுந்து காற்றுப்போல விரைந்து செல்லும் குதிரையையுடைய தம்மரசனை அவட்குக் காட்டா நிற்க; என்க.
 
(விளக்கம்) பழி - வசை. கழிமதி - பேரறிவு. மகளொடு - மகளை; உருபு மயக்கம். கற்றோர் தெரிந்த - கற்றோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்ட. இவுளி - குதிரை. காவலன் : உதயணன்.