பக்கம் எண் :

பக்கம் எண்:714

உரை
 
4. வத்தவ காண்டம்
 
10. பிரச்சோதனன் தூதுவிட்டது
 
          மூப்பினு முறையினும் யாப்பமை குலத்தினும்
          அன்பினுங் கேளினு மென்றிவை பிறவினும்
          .........................................................
          மாசனம் புகழு மணிபுனைந் தியற்றிய
    100    ஆசனத் திழிந்த வமைதிகொ ளிருக்கையன்
 
               (உதயணன் ஓலை பெறுதல்)
            97 - 100 : மூப்பினும்.........இருக்கையன்
 
(பொழிப்புரை) மூப்பாலும் முறைமையாலும் தொடர்பமைந்த குலத்தாலும் அன்பாலும் கேண்மையாலும் இவை போன்ற பிற பண்புகளாலும்......பெருமக்கள் புகழுதற்குக் காரணமான மணிகள் பதித்து இயற்றப்பட்ட ஆசனத்தினின்றும் இறங்கி அமைதி கொள்ளுதற்குக் காரணமான மற்றோர் இருக்கையின்கண் இருந்து; என்க.
 
(விளக்கம்) மூப்பு முதலியன அவ்வவையோர்க்கு அடைமொழிகளாதல் வேண்டும். இவை பிரச்சோதனனுக்குரிய அடைமொழிகள் என்பாருமுளர். 99ஆம் அடி அழிந்தொழிந்தது. மாசனம் - பெருமக்கள்.