உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
ஆகிய
விழுச்சீ ரரும்பெற லமைச்சன்
யூகியை யெமரொடு முடனே
விடுக்க கரும
முண்டவற் காணலுற்
றனெனென ஒருமையிற்
பிறவு முரைத்தவை யெல்லாம் 140
பெருமையிற் கொள்கெனப் பிரியாது
புணர்த்த மந்திர
விழுப்பொருண் மனத்தே யடக்கி
வெந்திறல் வீரன் விளங்கிய
முறுவலன் |
|
(இதுவுமது)
136 - 142 :
ஆகிய............முறுவலன் |
|
(பொழிப்புரை) ''நினக்கு உயிரொன்றாகிய மிக்க புகழையுடைய
பெறுதற்கரிய அமைச்சனாகிய யூகியை எந்தூதுவரொடும் உடனே எம்பால் விடுத்திடுக.
அவ்வமைச்சன்பால் எனக்குக் காரிய மிருத்தலின் அவனைக் காணவிரும்புகின்றேன்'' எனவும்,
''ஒற்றுமையுண்டாக யான் ஈண்டுக் கூறியவற்றை யெல்லாம் நின் பெருந்தகைமையால்
உளங்கொள்க !'' எனவும் வரைந்து தன்னை மனம் பிரியாமல் கூட்டிவைத்த சூழ்ச்சியினையுடைய
சிறந்த அவ்வோலையின்கண் அமைந்த பொருளையெல்லாம் வெவ்விய ஆற்றலையுடைய
அவ்வீரமன்னன் ஓதியுணர்ந்து தன் திரு உளத்தடைத்து விளங்கிய புன்னகையுடையனாய், என்க. |
|
(விளக்கம்) விழுச்சீர் - சிறந்த புகழ். எமர் - எந்தூதுவர். கருமம் - காரியம். அவன் - அந்த
யூகி. பெருமை - பெருந்தகைமை. வீரன் - உதயணன். |