உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
ஆண
மாகிய வருந்தவன் வாய்மொழி
பேணு மாதலிற் பெருமகன் றெளிந்தனன்
170 ஒத்த தோவது வத்தவ
வந்தென வாழ்த்துபு
வணங்கிய வயங்கிழை கேட்பத் |
|
(இதுவுமது)
168 - 171 :
ஆணம்................கேட்ப |
|
(பொழிப்புரை) "அன்புருவாகிய அத்தவமுனிவனுடைய
வாய்மொழியினை எம்மரசன் பெரிதும் பேணும் இயல்புடையன் ஆதலின், ''வாசவதத்தை
இறந்துபட்டாள்'' என்னும் அச்செய்தி பொய்யென்று தெளிந்து கொண்டனன். வத்தவ
வேந்தனே! அம்முனிவன் முற்படத் தன் ஓதி ஞானத்தால் அறிந்து கூறிய அச்செய்தி
இப்பொழுது நடை முறையில் வந்து பொருந்திற்றன்றோ?' என்று விளங்கிய அணிகலன்களையுடைய
அப்பதுமை அச்செய்தி ஓலையின்கண் விடப்பட்டமைக்குக் காரணங் காட்டி மீண்டும்
வாழ்த்தி வணங்கினளாக; அப்பதுமை கேட்கும்படி; என்க. |
|
(விளக்கம்) ஆணம் - அன்பு. அன்புருவமாகிய என்க. அருந்தவன் - செயற்கரிய தவத்தையுடைய முனிவன்.
பேணுமாதலின் - போற்றிக் கேட்கும் இயல்புடையனாதலின். பெருமகன் : பிரச்சோதனன். அது
- அவன் கூறிய மொழி. வந்து ஒத்ததோ என மாறுக. வாழ்த்துபு - வாழ்த்தி. வயங்கிழை :
பதுமை. |