உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
தாழ்த்துணைத் தலைப்பொறிக் கூட்டம்
போலப்
பொய்ப்பின் றொத்தது செப்பிய
பொருளென உறுதவற்
புகழ்ந்து மறுவில் வாய்மொழி 175
மனத்தமர் தோழரொடு மன்னவன்
போந்து
திருக்கிளர் முற்றம் விருப்பொடு
புகுந்து
|
|
(உதயணன்
கூறுதல்) 172
- 176 : தாழ்.........புகுந்து
|
|
(பொழிப்புரை) ''தாழக் கோலையுடைய இரட்டையாகிய கதவின்
இயந்திரங்கள் பொருந்தும் பொருத்தம் போல அம்முனிவன் கூறிய செய்தியும்
பொய்ப்படுதலின்றி நிகழ்ச்சியோடு வந்து ஒத்தது'' என்று மிக்க தவத்தினையுடைய
அம்முனிவனை உதயணன் பெரிதும் புகழ்ந்து குற்றமற்ற மெய்ம்மொழியினையுடையவரும் தன்
நெஞ்சின்கண் உறைபவருமாகிய தன் தோழரொடு அம்மன்னவன் சென்று செல்வ மிகாநின்ற
அரண்மனை முற்றத்தே விருப்பத்தோடு புகுந்து; என்க.
|
|
(விளக்கம்) தாழ் - தாழக்கோல். துணை - இரட்டை. தாழக்கோல் கூறியதனால் இரட்டைக் கதவு என்க.
பொறிக் கூட்டம் - பொறிகள் புணரும் புணர்ச்சி. உறுதவன் - மிக்க தவத்தையுடைய
முனிவன். மறு - குற்றம். மனத்தமர் தோழர் - மனத்தின்கண் உறையும் தோழர்.
மனத்தின்கண் பெரிதும் விரும்புந் தோழர் எனினுமாம். திருக்கிளர் முற்றம் - செல்வம்
பெருகும் முற்றம்.
|