உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
10. பிரச்சோதனன் தூதுவிட்டது |
|
பல்வகை மரபிற் பண்ணி
காரம் செல்வன
வெல்லாஞ் செவ்விதிற் கண்டு
|
|
(உதயணன்
பண்ணிகாரங்களைக்
காணுதல்) 177
- 178 : பல்..........கண்டு
|
|
(பொழிப்புரை) உதயண மன்னன் தன் மாமடிகளாகிய பிரச்சோதன
மன்னன் வரிசையாகத் தமக்கு விடுத்த பலவேறு வகைப்பட்ட பொருள்கள் அரண்மனைக்குள்
கொண்டு செல்வனவற்றை எல்லாம் நன்கு கண்கூடாகப் பார்வையிட்டு;
என்க.
|
|
(விளக்கம்) பண்ணிகாரம் - பலவகைப் பொருள். செவ்விதின் -
நன்கு.
|