உரை |
|
3. மகத காண்டம் |
|
5. மண்ணூநீராட்டியது |
|
உட்குவ
ருருவங் கட்புல
மருங்கிற்
காண விடாஅ ராணையி
னகற்றிக்
கச்சுப்பிணி யுறுத்துக் கண்டகம்
பூண்ட அச்சுறு
நோக்கி னறுபது கழிந்த 110
காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக் |
|
(காஞ்சுகி
மாக்கள் செயல்) 106 -
110; உட்கு......... ..காப்ப |
|
(பொழிப்புரை) காண்போர்க்கு
அச்சம் வருதற்குக் காரணமான உருவமுடையோர்களைப் பதுமாபதி தன்
கண்ணெதிரே காணாதிருத்தற் பொருட்டு ஆணை கூறி அகற்றி இடையிலே
கச்சையிறுக்கி உடைவாளைக் கையிலே பற்றியவரும் காண்போர் அஞ்சும்
நோக்குடையோரும் அறுபதுயாண்டைக்கடந்த முதுமையுடையோருமாகிய காஞ்சுகி
மாக்கள் அணுகி நின்று பக்கங்களிலே பாதுகாவல் செய்து
வாராநிற்ப என்க. |
|
(விளக்கம்) காஞ்சுகி
மாக்கள் உட்குவரும் உருவமுடையாரை அகற்றிக் காப்பவென்க.
கண்டகம் - உடைவாள். மகளிரைக் காக்குங்காவலர் ஆகலின் முதுமையுடையராதல்
வேண்டிற்று. காஞ்சுகி மாக்கள் - மெய்ப்பை புக்கவர். |