பக்கம் எண் :

பக்கம் எண்:731

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
            கோல மான கோபத்திற் பிறந்தன
            பாலவா வேறொடு பதினா றாயிரம்
            காவல் வேந்தற்குக் காட்டுபு கொடுக்கெனப்
 
                      (இதுவுமது)
            32 - 34 : கோலம்..........கொடுக்கென
 
(பொழிப்புரை) ழகான கோபங்களில் தோன்றிய மிக்க பாலையுடைய பதினாறாயிரம் ஆக்களும் காளைகளும் வழங்கி "இவையிற்றை அந்நாட்டினைப் பாதுகாக்கும் பிரச்சோதன மன்னனுக்குக் கண்கூடாகக் காட்டி அளித்திடுக !" என்று கூறி; என்க.
 
(விளக்கம்) கோலம் - அழகு. கோபம் - ஆக்கள் பல்குமிடம். பாலவா - பாலையுடைய ஆ. ஏறு - காளை. வேந்தன் : பிரச்சோதனன். காட்டுபு - காட்டி.