| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
| |
35 பாய்புனற்
படப்பைப் பாஞ்சா
லரசன்
உரிமைப் பள்ளியுட் டெரிவனன்
கொண்ட
ஏற்ற கோலத் திளமையொடு
புணர்ந்தோர்
நூற்றொரு பதின்மர் கோற்றொடி
மகளிருட்
.................................ட் பணைமுலை
மகளிரைப்
40 பாசிழை யாயத்து வாசவ
தத்தையைப்
பயந்தினி தெடுத்த வயங்கிழைப்
பணைத்தோட்
கோப்பெருந் தேவிக்குக் கொடுக்கெனப் பணித்தே
|
| |
(வாசவதத்தையின் தாய்க்கு விடுத்த
மகளிர்)
35 - 42 :
பாய்.............பணித்தே
|
| |
| (பொழிப்புரை) பாயாநின்ற நீரையுடைய தோட்டங்களையுடைய பாஞ்சால நாட்டு மன்னனாகிய ஆருணியின்
உவளகப் பள்ளியில் அவ்வுதயணன் ஆராய்ந்தெடுத்த பருவம் எய்திய அழகும் இளமையும்
பொருந்திய திரண்ட வளையலணிந்த நூற்றுப்பத்து மகளிருள்
வைத்து,......................பணைத்த முலையினையுடைய மகளிரைப் பசிய அணிகலனணிந்த
தோழிமாரையுடைய வாசவதத்தை நல்லாளை ஈன்று இனிதே வளர்த்தவளும், விளங்கா நின்ற
அணிகலன்களையுடையவளும் மூங்கில் போன்ற தோள்களையுடையவளும் ஆகிய
கோப்பெருந்தேவிக்குக் கொடுத்திடுக! என்று கட்டளையிட்டு; என்க.
|
| |
| (விளக்கம்) படப்பை - தோட்டம். பாஞ்சால் -
பாஞ்சாலம் : விகாரம். அரசன் - ஆருணி. உரிமைப்பள்ளி - உவளகம் (அந்தப்புரம்).
கோற்றொடி - திரண்டவளையல். 39 ஆம் அடியின் முற்பகுதி அழிந்தது. பயந்து - ஈன்று.
பணைத்தோள் - மூங்கில் போன்ற தோள்.
|