உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
முற்பாற் கூறிய
வெற்பினுட் பிறந்த
எட்டுநூ றாயிர மெரிபுரை
சுவணம் பட்டாங்
கிவற்றைப் பரதகற் கீகென
|
|
(பரதகனுக்கு அளித்த
பொருள்கள்)
51 - 53 :
முன்பாற்.......என
|
|
(பொழிப்புரை) முன்னே கூறப்பட்ட அயிராவத மலையில் தோன்றிய தீப்பிழம்பு போன்ற எண்ணூறாயிரம்
பொன்னைச் சுட்டி இவற்றை இயல்பாகவே பரதகனுக்கு அளித்துவிடுக என்று கூறி;
என்க.
|
|
(விளக்கம்) முற்பாற் கூறிய என்றது இக்காதையில் முன்னே கூறிய
அயிராவதமலை என்றவாறு. 21 ஆம் அடியைக் காண்க. சுவணம் - சிங்கச் சுவணம் என்னும்
பொன். எரி - தீ. பட்டாங்கு - இயல்பாக. பரதகன் : பிரச்சோதனன் அமைச்சருள்
ஒருவன்.
|