| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
| |
மற்றவன் றம்பியர்க்
கத்துணைப் போக்கிப் 55 பதினா றாயிரஞ்
சிவேதற் கீத்துப் பிறவு மின்னவை
பெறுவோர்க் கருளி
|
| |
(அவன் தம்பிக்கும்
சிவேதனுக்கும் அளித்த
பொருள்கள்)
54 - 56 :
மற்றவன்...................அருளி
|
| |
| (பொழிப்புரை) பின்னரும் அப்பரதகன் தம்பிமாருக்கும் எண்ணூறாயிரம் பொன்களைப் பகுத்து வழங்குக! என்று
சொல்லி விடுத்துச் சிவேதன் என்னும் அமைச்சனுக்குப் பதினாறாயிரம் பொன்களை வழங்கி
மேலும் இத்தகைய பொருள்களைப் பெறத் தகுந்தோர் பிறர்க்கும் வழங்கி;
என்க.
|
| |
| (விளக்கம்) மற்றவன் : பரதகன். அத்துணை - அவ்வளவு.
எண்ணூறாயிரம் பொன் - பதினாறாயிரம் சிங்கச் சுவணப் பொன் என்க. சிவேதன் :
பிரச்சோதனன் முதலமைச்சன். பெறுவோர் பிறர்க்கும் அருளி
என்க.
|