உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
வனப்பொடு புணர்ந்த
வையாக் கிரமெனும்
சிலைப்பொலி நெடுந்தேர் செவ்விதி
னல்கி வீயா வென்றி
விண்ணுத் தராயனோ 60 டூகியுஞ்
செல்கென வோம்படுத் துரைத்து
|
|
(யூகியின்
புறப்பாடு) 57
- 60:
வனப்பொடு.....................உரைத்து
|
|
(பொழிப்புரை) பின்னர் இவற்றையெல்லாம் யூகியின்பால் ஒப்படைத்து அவனுக்கு அழகோடு கூடிய வையாக்கிரம்
என்னும் பெயரையுடைய மலைபோன்று விளங்குகின்ற நெடிய தேரொன்றனைச் செம்மையுடையதாக
வழங்கிக் கெடாத வெற்றியினையுடைய ''விண்ணுத்தராயன்'' என்னும் போர்மறவனோடு அந்த
யூகியும் செல்வானாக என்று கூறி; என்க
|
|
(விளக்கம்) வனப்பு - தேரிலக்கணம். சிலை - மலை.
செவ்விதின் என்புழிச் செம்மை - செப்பம்; செப்பமுடையதாக என்க. விண்ணுத்தராயன்
இவனுக்கு வீயாவென்றி என்னும் அடைபுணர்த்தமையால் இவன் போர் மறவன் என்பது பெற்றாம்.
யூகியை விண்ணுத்தராயன்பால் ஓம்படுத்து எனினுமாம். விண்ணுத்தராயன் யூகியின்
மெய்காப்பாளனாக விடப்பட்டான் என்று
கொள்க.
|