உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது |
|
வினைமேம் படூஉ
மேற்றசை நாளுள் நிகழ்ந்த
நன்னா ளறிந்தனர்
கொடுப்ப அப்பா
லவர்களைப் போக்கி யிப்பால்
|
|
(யூகி முதலியோரை
விடுத்தல்)
61 - 63:
வினைமேம்............இப்பால்
|
|
(பொழிப்புரை) மேற்கொண்டு செல்லும் காரியம் நன்கு நிறைவேறி மேம்பாடுறுதற்குக் காரணமான மேலான
கோளியக்கமுடைய நாள்களுள் வைத்து அப்பொழுது நிகழ்ந்த நல்லதொரு நாளினைக் கணிகள்
ஆராய்ந்தறிந்து குறித்துக் கொடுப்ப அந்த நாளிலே யூகி முதலியோரை உஞ்சை
நகரத்திற்குப் புறப்படச் செய்த பின்னர்; என்க.
|
|
(விளக்கம்) வினை - எடுத்துக் கொண்ட காரியம். மேற்றசை -
மேலான கோளியக்கம். அவை சோதிட நூலுள் சூரியதசை, சந்திரதசை என்பன முதலாகக்
கூறப்படுவன. நாளுள் நிகழ்ந்த நல்நாள் என்பதற்கு நாளில் நிகழ்ந்த நன்முழுத்தம்
எனினுமாம். அப்பால் இப்பால் என்பன அங்கு இங்கு என்று இடஞ்சுட்டி
நின்றன.
|