உரை |
|
3. மகத காண்டம் |
|
5. மண்ணூநீராட்டியது |
|
கண்டோர்
விழையுந் தண்டாக்
காதலொ
டருந்தவ முண்மை யறிமி
னீரெனப்
பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள்
போலப்
பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு
115 வண்ண மலருஞ் சுண்ணமுந்
தூவ அநங்கத்
தானத் தணிமலர்க்
காவிற்
புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென். |
|
(பதுமாபதி
காமன் கோயிலையடைதல்)
111 - 117; கண்டோர்...... .....பொலிந்தென் |
|
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதி
தன்னைக் கண்டோரெல்லாம் ஆர்வமுறுதற்குக் காரணமான
பேரன்போடு உலகினர்க்குச் செயற்கரிய தவம் என்று ஒன்றுண்டு அதனை என்
வாயிலாய் அறிந்து கொண்மின் என்று முரசறைந்து கூறுவாள் போன்று பசிய
தொடியணிந்த மகளிர் தம் நெஞ்சு நிறைந்த அன்போடு நிறமிக்க
மலர்களையும் சுண்ணங்களையும் தூவாநிற்பச் சென்று பொலிவுடையளாய்க்
காமவேள் கோயிலைச் சார்ந்த அழகிய பூம்பொழிலிலே புகுந்து ஆங்கு பிறர்
யாருமில்லாததோர் இடத்தை எய்தினள் என்க. |
|
(விளக்கம்) காஞ்சுகி
மாக்கள்- மெய்ப்பையிட்ட காவலர்கள். தண்டா - அமையாத. 112-5.
இவ்வடிகளின் கருத்தோடு ''அறத்தா றிதுவென வேண்டா சிவிகை, பொறுத்தா
னொடூர்ந்தா னிடை'' என்னும் திருக்குறளின் கருத்தையும் நினைக.
அநங்கத்தானம் - காமன் கோயில்,
5. பதுமாபதி போந்தது முற்றிற்று,
------------------------------------------------------------------------ |