பக்கம் எண் :

பக்கம் எண்:741

உரை
 
4. வத்தவ காண்டம்
 
11. பிரச்சோதனற்குப் பண்ணிகாரம் விட்டது
 
            பழிப்பில் காரிகைப் பதுமா பதியுமென்
  85       றொண்டுணைக் காத லொருதுணைத் தேவியர்
           முட்டில் செல்வமொடு முறைமையின் வழிபட
 
                       (பதுமாபதி)
              84 - 86 : பழிப்பில்..........வழிபட
 
(பொழிப்புரை) குற்றமற்ற அழகினையுடைய பதுமாபதியும் என்று கூறப்பட்ட ஒள்ளிய காதன்மிக்க ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவியராகிய கோப்பெருந்தேவியர் இருவரும் முட்டுப்பாடில்லாத செல்வத்தோடிருந்து தத்தமக்குரிய முறைமையினாலே தனக்கு வழிபாடு செய்யாநிற்ப; என்க.
 
(விளக்கம்) பழிப்பு - குற்றம் . காரிகை - அழகு, துணை - வாழ்க்கைத்துணை.