உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
அன்புமிகச்
சிறந்தாண் டமருங் காலை
மன்பெருஞ் சிறப்பின் மறப்போ
ருதயணன் அருமை
சான்ற வாருணி
யரசன் உரிமைப்
பள்ளியுட் டெரிவனன் கொண்ட 5
ஆயிரத் தெண்ம ரரங்கியன்
மகளிர் மாசி
றாமரை மலர்மக
ளனையோர் ஆடலும்
பாடலு நாடொறு
நவின்ற நன்னுதன்
மகளிரை மின்னேர் நுண்ணிடை
|
|
(வாசவதத்தையும்
பதுமாபதியும்) 1
- 8 : அன்பு.................மகளிரை
|
|
(பொழிப்புரை) அரசனும் தேவிமாரும் நாள்தோறும் அன்பு பெருக இன்புற்று அமருங்காலத்தே நிலைபெற்ற பெரிய
சிறப்பினையும் வீரமிக்க போராற்றலையுமுடைய வீறுபெற்றுயர்ந்த நெடிய புகழையுடைய
அவ்வுதயணமன்னன் தன் பகைவனாகிய ஆருணியரசனைக் கொன்று அவனது உவளகத்தைக் கைப்பற்றிய
காலத்தே அவ்வுவளகத்தின்கண் ஆராய்ந்து கைப்பற்றிய அரிய கலைத்திறம் நிறைந்தவரும்
குற்றமற்ற செந்தாமரை மலரில் வாழுகின்ற திருமகளை ஒத்த அழகுடையோரும் கூத்தாடுங்
கலைத்திறமுடையோரும் நாள்தோறும் ஆடுதலும் பாடுதலும் பயின்றவரும் நல்ல நுதலுடையோரும்
ஆகிய தோழிமார் ஆயிரத்தெண்மரை; என்க.
|
|
(விளக்கம்) ஆண்டு - அவ்வரண்மனைக்கண். இன்புற்று அமருங்காலை
என்க. அருமைசான்ற மகளிர் என்க. உரிமைப்பள்ளி - உவளகம். நவின்ற - பயின்ற.
மகளிர் - தோழியர்.
|