உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
பந்துவிளை யாட்டுப் பரிந்தன
ரதனாற்
சிறப்பின் றுலாப்போக் கறத்தகை
யண்ணனின்
மாண்குழைத் தேவிய ரிருவரு
மிகறலிற்
காண்டகை யுடைத்தது கரந்தனை யாகி
25 வடிவேற் றடக்கை வத்தவ
ரிறைவ
பிடிமிசை வந்து பிணாவுரு
வாகிச்
சென்றனை காண்கென நன்றென விரும்பிப் |
|
(இதுவுமது)
21 - 27 : அதனால்...........காண்கென |
|
(பொழிப்புரை) 'ஆதலாலே அறத்தகுதியையுடைய பெருமானே! வடித்த வேலையுடைய பெரிய கையையுடைய வத்தவர்
வேந்தனே! இன்று யாம் உலாப் போதல் அத்துணைச் சிறப்புடைத்தன்று, எற்றாலெனின் நின்
மாண்பமைந்த குழையணிந்த தேவிமாரிருவரும் தம்முள் மாறுபட்டு இயற்றுகின்ற இப்பந்தாட்டம்
காணத்தகுந்த அழகுடையதாகுமன்றோ? எனவே நீ இன்று உலாப் போதலைத் தவிர்ந்து பெண்ணாக
மாறுவேடங் கொண்டு பிடியானையில் ஏறி ஆங்குச் சென்று, கண்டருளுக!' என்று கூறா நிற்ப;
என்க. |
|
(விளக்கம்) உலாப் போக்கு - உலாவப் போதல். அண்ணல்,
இறைவ இரண்டும் விளிகள். அது - அவ்விளையாட்டு. கரந்தனை - உன்னுருவை மறைத்து. பிணாவுரு -
பெண் வேடம்; 'பெண்ணும்பிணாவும் மக்கட் குரிய' (தொல் - மரபு. சூ - 61.) சென்றனை -
சென்று. |