உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
அணங்கெனக் குலாஅ யறிவோர்
புனைந்த
கிடையும் பூளையு மிடைவரி
யுலண்டும்
அடையப் பிடித்தவை யமைதியிற்
றிரட்டிப்
பீலியு மயிரும் வாலிதின் வலந்து
45 நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற்
சுற்றிக்
கோல மாகக் கொண்டனர்
பிடித்துப்
பாம்பின் றோலும் பீலிக்
கண்ணும்
பூம்புன னுரையும் புரையக்
குத்திப்
பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப்
பந்துகள்
|
|
(பந்து
வண்ணனை) 41
- 49 : அறிவோர்..............பந்துகள்
|
|
(பொழிப்புரை) தொழில் நுணுக்கம் அறிவோரால் இயற்றப்பட்டனவாகிய நெட்டியும் பஞ்சும் இடையிடையே
வரிகின்ற உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிற்றை அமைவாக உருட்டி மேலே மயிற்பீலியும்
மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணிதாகச்
சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில்
தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த
நொய்ம்மையினையுடைய பல்வேறு தொழில் திறம் அமைந்த பந்துகளுள் வைத்து;
என்க.
|
|
(விளக்கம்) அறிவோர் - தொழில் நுணுக்கமறிவோர். கிடை -
நெட்டி. பூளை - பூளைப்பூவாகிய பஞ்சு. உலண்டு - பட்டுநூல்; பட்டுமாம். அடைய - நெருங்க.
அமைதியில் - அமைவாக. வாலிதின் - நன்றாக. வலந்து - பின்னி. பிடித்து - அழுத்தி.
புரைய - போல. குத்தி - தைத்து. நொய்ம்மை -
கனமின்மை.
|