| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 12. பந்தடி கண்டது |
| |
60 சூடக முன்கையிற் சுழன்றுமா
றடித்தும்
அடித்த பந்துக ளங்கையி
னடக்கியும்
மறித்துத் தட்டியுந் தனித்தனி
போக்கியும்
பாயிர மின்றிப் பல்கல
னொலிப்ப
ஆயிரங் கைநனி யடித்தவ ளகல |
| |
(இதுவுமது)
60 - 64 : சூடகம்.............அகல
|
| |
| (பொழிப்புரை) சூடகமணிந்த தன் முன் கையாலே சுழன்று சுழன்று மாறுபட அடித்தும், அடித்த பந்துகளை அழகிய
கையால் தடுத்தும், மீண்டும் தட்டியும் அவற்றைத் தனித்தனியாகச் செலுத்தியும்
பந்தடித்தற்குரிய முன்னுரை ஏதும் மொழியாமல் அவ்விராசனை தன்னுடைய பல்வேறு
அணிகலன்களும் ஒலிக்கும்படி இடையறாமல் நன்கு ஆயிரங்கை அடித்து நிறுத்தி
அவ்விடத்தினின்றும் அகலாநிற்ப ; என்க.
|
| |
| (விளக்கம்) அங்கை - உள்ளங்கையுமாம். மறித்து - தடுத்து.
பாயிரம் - முன்னுரை. ஆயிரங்கை - ஆயிரம் முறை. அவள் :
அவ்விராசனை.
|