உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
85 கூன்மேற் புரட்டியுங் குயநடு
வொட்டியும்
வாக்குறப் பாடியு மேற்படக்
கிடத்தியும்
நோக்குநர் மகிழப் பூக்குழன்
முடித்தும்
பட்ட நெற்றியிற் பொட்டிடை
யேற்றும்
மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
90 முன்னிய வகையான் முன்னீ
ராயிரங்
கைந்நனி யடித்துக் கையவள் விடலும்
|
|
(இதுவுமது)
85 - 91 : கூன்.............விடலும்
|
|
(பொழிப்புரை) அப்பந்துகளைத் தன் கூனலின் மேல் புரளச் செய்தும், முலைகளினிடையே படுவித்தும்,
திருத்தமுறப் பாடியும் தன்மேலே கிடக்கச் செய்தும் நோக்குவார் மகிழும் பொருட்டு
இங்ஙனம் பந்தாடுங் காலத்திலேயே, மலருடைய தனது கூந்தலை முடியிட்டும், பட்டமணிந்த
நெற்றியின்கண் தீட்டிய பொட்டிலே பந்தினை ஏற்றும், மீண்டுவரும் அப்பந்தினைத் தன்
புறங்கையால் தடுத்து அடித்தும் இங்ஙனமாகத் தான் நினைத்தபடியே முற்பட்டு இரண்டாயிரங்
கை நன்கு அடித்துப் பின்னர் அவள் அப்பந்தாட்டத்தினைக் கைவிடாநிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) புரட்டி - புரளச் செய்து. குயம் - முலை. வாக்கு -
திருத்தம். முன்னியவகை - நினைத்த வகை. அவள் :
அயிராபதி.
|