உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
முடக்குவிர லெற்றியும் பரப்புவிரற்
பாய்ச்சியும் 105 தனித்துவிரற்
றரித்து மறித்தெதி
ரடித்தும் குருவிக்
கவர்ச்சியி னதிரப் போக்கியும்
அருவிப் பரப்பின் முரியத்
தாழ்த்தியும்
ஒருபாற் பந்தி னொருபாற்
பந்துற
இருபாற் றிசையு மியைவன ளாகிப்
110 பாம்பொழுக் காக வோங்கின
வோட்டியும்
காம்பிலை வீழ்ச்சியி னாங்கிழித்
திட்டும்
முன்னிய வகையான் முன்னீ
ராயிரத் தைந்நூ
றடித்துப் பின்னவள் விடலும் |
|
(இதுவுமது)
104 - 113 :
முடக்கு..........விடலும் |
|
(பொழிப்புரை) விரல் முடக்கிப் புறங்கையாற் புடைத்தும் விரல் பரப்பி அங்கையாலடித்தும் ஒற்றை
விரலில் தடுத்தும் மீண்டும் எதிரே அடித்தும் குருவிகள் சிதறிப் பறப்பனபோல விண்
அதிரச் சிதறிச் செல்லும்படி செலுத்தியும் அருவி பரந்து வீழுமாறு போல வளைந்து வீழ
வீழ்த்தியும் ஒரு பக்கத்து அடித்த பந்தை மற்றொரு பக்கத்து அடித்த பந்து சென்று
தாக்கும்படி அத்துணை விரைவாக இரு பக்கங்களினும் பொருந்தி அடிப்பாளாய்ப் பாம்பு
வளைந்து வளைந்து இயங்குமாறு போல உயர்ந்து வளைந்து ஓடச் செலுத்தியும் அவையிற்றைக்
காம்பினின்றும் இலைகள் நிரல்பட உதிருமாறு போலே அவ்விடத்தே நிரலாக வீழும்படி
செய்தும், இவ்வாறு அவள் தான் கருதிய முறையால் முற்பட இடையறவின்றி
இரண்டாயிரத்தைந்நூறு கை அடித்தபின்னர் ஆட்டத்தைக் கைவிட்டுப் போகாநிற்ப ;
என்க. |
|
(விளக்கம்) முடக்கு விரல் எற்றியும் என்றது முடக்கிய
விரலையுடைய புறங்கையால் புடைத்தும் என்றவாறு. தனித்து : தனியான. குருவிக்
கவர்ச்சியின் - குருவிகள் பறக்கும்பொழுது பல திசையினும் சிதறிப் பறப்பதுபோல என்க.
''சிவ்வென்று'' பாய்தலின் அதிரப் போக்கி என்றார். ஒரு பக்கத்திலடித்த பந்தும்
அப்பொழுதே மறுபக்கத்திற் பாய்ந்தடித்த பந்தும் வானவெளியில் மோதி மீளும்படி
அடித்தும் என்க. பாம்பொழுக்கு - பாம்புபோல வளைந்து செல்லும் செலவு. முன் - முற்பட்டு.
அவள் : விச்சுவலேகை. |