உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
வரிநெடும்
பந்து வந்தெதிர்
கொள்ளுநர் ஒருவரு
மின்றி நின்றுழிப் பொருவரும்
135 வாளேர் தடங்கண் வாசவ
தத்தை
கோளேர் மதிமுகங் கோட்டி நோக்கக் |
|
(வாசவதத்தை தன் தோழியரை நோக்கல்)
133 - 136 :
வரி.........நோக்க |
|
(பொழிப்புரை) ஆரியை மூவாயிரங்கை அடித்து நிறுத்திய பின்னர் அக்களத்தின்கண் ஆடுதற்குத் துணிந்துவந்து
நெடிய வரிகளமைந்த பந்தினை ஏற்றுக்கொள்ளுவோர் யாருமின்றி ஆடல் நின்றதாக,
அப்பொழுது போர் வருதற்குக் காரணமான வாளையொத்த பெரிய கண்ணையுடைய வாசவதத்தை
திங்கட்கோள் போன்ற தன் முகத்தை வளைத்துத் தன் தோழிமார் குழுவினை
நோக்காநிற்றலால்; என்க. |
|
(விளக்கம்) நெடுவரிபந்து என மாற்றுக. நெடிதாக வரிந்த பந்து
என்க. எதிர் கொள்ளுநர் - ஏற்றுக் கொள்வோர். ஏர் : உவமஉருபு. மதிக்கோள்
ஏர்முகம் என மாறுக. மதியாகிய கோள் என்க. தோழிமாரை நோக்க
என்க. |