உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
160 மற்றவை தொலையச் செற்றொளி
திகழத்
தனக்கமை வெய்திய தவளையங்
கிண்கிணி
வனப்பெடுத் துரைஇ வையகம்
புகழினும் புகழ்ச்சி
முற்றாப் பொருவரு வனப்பிற்
றிருக்கண் டன்ன வுருக்கிளர் கண்ணி
165 கோசலத் தரசன் கோமகட்
பூவணி வாசச்
சுரிகுழன் மாணிழை யொருத்தியென் றாங்கொரு காரணத் தவள்வயி
னிருந்தோள
|
|
(இதுவுமது)
160 - 167 : ஒளி.........இருந்தோள்
|
|
(பொழிப்புரை) ஒளி திகழும்படி தன் அழகுக்குப் பொருந்திய தன் காலணியாகிய அழகிய தவளைக் கிண்கிணி
தன்னுடைய அழகை எடுத்துக் கூறுதலாலே இவ்வுலக முழுதும் புகழ்ந்தாலும் புகழுதல்
முற்றுப்பெறாமைக்குக் காரணமான ஒப்பற்ற அழகோடே திருமகளைக் கண்ணாற் கண்டாற்போன்ற
அழகு மிகா நின்ற கண்ணையுடையவளும் கோசலமன்னன் மகளும் ஆகிய மானனீகை என்பாள்
மலரணிந்த மணமுடைய சுரிந்த குழலையுடையவளும் மாட்சிமையுடைய அணிகலன்கள் அணிந்தவளும்
ஆகிய ஒரு தோழிபோல அவ்வரண்மனைக்கண் ஒரு காரணத்தினாலே அவ் வாசவதத்தையின் பால்
இருந்தவள் ; என்க.
|
|
(விளக்கம்) தவளைக் கிண்கிணி - தவளைவாய் போன்ற
வாயையுடைய கிண்கிணி. உறைஇ - உறைத்து; உறைத்தலால் என்க. திரு - திருமகள். உரு - அழகு.
அரசன் மகள் தோழியுள் ஒருத்தி என்று ஒருகாரணத்தால் வாசவதத்தையின் பால் இருந்தவள்
என்க. காரணம் பின்னர் உணரப்படும். அவள் :
வாசவதத்தை.
|