| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 12. பந்தடி கண்டது |
| |
மண்டல
மாக்கி வட்டணை
முகத்தே 180 கொண்டனள்
போக்கிக் குறிவயிற்
பெயர்த்துப்
பூவீழ்த் தெழுப்பிப் புறங்கையின்
மற்றவை
தான்மறித் தடித்துத் தகுதியி
னெழவெழக்
காம தேவியர் காண்பன
ருவப்பப் பூமி
தேவியிற் புறம்போ வனள்போற்
185 பைய வெழுவோள் செய்தொழிற்
கீடாக் கையுங்
காலு மெய்யு மியையக்
கூடுமதி முகத்திடைப் புருவமுங் கண்ணும் |
| |
(இதுவுமது)
179 - 187 : வட்டணை.........கண்ணும் |
| |
| (பொழிப்புரை) தன்முன்னே அவ்வட்டத்தின்கண் பந்தினைக் கைக்கொண்டு வானத்தே எறிந்து மீட்டும்
அவற்றைப் பிடித்து நிலத்தின்கண் குறிப்பிட்ட ஓரிடத்தே அடித்தடித்து எழுப்பி
மீண்டுவரும் அப் பந்துகளைப் புறங்கையால் தடுத்துத் தடுத்து அடித்து அவை நிரலாக வானில்
எழுந்தோறும் எழுந்தோறும் விருப்பமுடைய அப் பெருந்தேவியர் கண்டு உவக்கும்படி
நிலமகளாகிய தோழியைவிட்டு அகன்று போவாள்போல மெல்ல எழுகின்றவள், தான் செய்யும்
தொழிலுக்கு ஈடாகத் தனது கையும் காலும் உடம்பும் பொருந்தாநிற்ப எல்லாக் கலைகளும் கூடிய
திங்கள்போன்ற தன் முகத்தின்கண் புருவங்களும் கண்களும்; என்க. |
| |
| (விளக்கம்) வட்டணை - வட்டம். பூ - பூமி. மறித்து - தடுத்து.
காம தேவியர் - விருப்பமுடைய தேவிமார். பூமிதேவி - நிலமகள். கூடுமதி : வினைத்தொகை.
88 ஆம் எண்ணில் நிற்றற்குரிய ஓரடி முழுதும்
சிதைவுற்றது. |