பக்கம் எண் :

பக்கம் எண்:77

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
     20    செம்மை நெடுங்கண் வெம்மை யுறாஅத்
           தெண்பனி யுறைத்தரத் திருத்துஞ் சகலத்துப்
           பொன்பூத் தன்ன வம்பூம் பசப்பொடு
           நாண்மலர்ப் புன்னைத் தாண்முதல் பொருந்திக்
           கொடிக்குருக் கத்திக் கோலச் செந்தளிர்
     25    பிடித்த விரலின னாகிக் கெடுத்த
           அவந்திகை மாத ரணிநல நசைஇக்
           கவன்றன னிருந்த காலை யகன்று
 
           (இதுவுமது)
     20 - 27 : செம்மை,,,,,,,,காலை
 
(பொழிப்புரை) தனது சிவந்த நெடிய கண்கள்
  வெப்பம் நீங்காத தெளிந்த துன்பக் கண்ணீரைத் துளியாநிற்பத்
  திருமகள் வீற்றிரா நின்ற தனது மார்பின்கண்ணே தோன்றிய
  பொன்பூத்தாற் போன்ற அழகிய பொலிவுடைய பசலை நிறத்தோடே
  புதிதாக மலர்ந்த மலர்கள் நிறைந்த ஒரு புன்னைமரத்தடியிலே
  அமர்ந்து கொடியாகிய குருக்கத்தியினது அழகிய சிவந்த தளிரைப்
  பிடித்த விரலையுடையனாய்த் தான் இழந்துவிட்ட வாசவதத் தையின்
  காதற்பண்பினையும் அழகையும் பெண்மை நலத்தையும் கருதிக்
  கருதி விரும்பிக் கவலையுற்றிருந்தபொழுது என்க,
 
(விளக்கம்) வெம்மையறாஅத் தெண்பணி என்றது
  துன்பக் கண்ணீரை உதயணன் மார்பிற் பசலையும் அழகே
  செய்ததென்பார் அம்பூம் பசலை என்றார், கெடுத்த - இழந்த.
  அவந்திகை - வாசவதத்தை மாதர் - காதல். அணியும் நலமும்
  என உம்மை விரிக்க,