உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
4. வத்தவ காண்டம் |
|
225 சுழன்றன தாமங் குழன்றது
கூந்தல்
அழன்றது மேனி யவிழ்ந்தது
மேகலை
எழுந்தது குறுவிய ரிழிந்தது
சாந்தம்
ஓடின தடங்கண் கூடின
புருவம்
அங்கையி னேற்றும் புறங்கையி னோட்டியும்
230 தங்குற வளைத்துத் தான்புரிந்
தடித்தும |
|
(இதுவுமது)
225 - 230 : குழன்றது...........அடித்தும் |
|
(பொழிப்புரை) அவளுடைய கூந்தல் சுருண்டது. உடல் வெதும்பியது. மேகலை அவிழ்ந்தது. குறுவியர்வு எழுந்தது.
சந்தனம் வழிந்தது. பெரிய கண்கள் அங்குமிங்கும் ஓடின. புருவங்கள் வளைந்து கூடின.
இங்ஙனமாக அம்மானனீகை அப்பந்துகளை உள்ளங்கையில் ஏற்றும் புறங்கையால் தட்டியும் அவை
தடையுறும்படி தன் உடலை வளைத்து விரும்பி அடித்தும்; என்க. |
|
(விளக்கம்) குழன்றது - சுருண்டது. அழன்றது - வெதும்பியது.
குறுவியர் - சிறிய வியர்வை நீர்த்துளி. சாந்தம் - சந்தனம். அங்கை -
உள்ளங்கை. தங்குற - தடையுற. தான் உடலை வளைத்து அடித்தும் என்க. புரிந்து -
விரும்பி. |