உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது முற்றிற்று. |
|
கண்ணார் மாதர் மதிமுகங்
காணிற் காவன் மன்னன்
கலங்கலு முண்டெனத் தேவியு முணர்வா
டீதென நினைஇ நின்ற வளவிற்
சென்றவண் முகத்தே
|
|
(வாசவதத்தையின்
எண்ணம்) 246
- 249 : கண்ணார்............அளவில்
|
|
(பொழிப்புரை) மானனீகையின் பேரெழிலையும் ஆட்டத் திறனையும் நேரிற்கண்ட கோப்பெருந்தேவி
வாசவதத்தை உலகங் காவலனாகிய எம்பெருமான் காண்போர் கண்ணில் நிறைந்த பேரழகுடைய
இம்மானனீகையின் திங்கள் போன்ற முகத்தை என்றேனும் காண்பானாயின் காமுற்று நெஞ்சு
கலங்குதல்கூடும் என்றும், இவளை அவன் காணவிடுதல் தீமையாகும் என்றும் தன்னெஞ்சின்கண்
நினைத்து நின்ற காலத்தே என்க.
|
|
(விளக்கம்) கண்ணார் மாதர் - காண்போர் கண்ணிறைந்த அழகு.
மன்னன் : உதயணன். தேவி : வாசவதத்தை. நினைஇ -
நினைத்து.
|