உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
டாயிழை
பட்டதற் காற்றா
ளாயவள் 145 கையிற் கட்டிய
கச்சவிழ்த் திட்டு
மைவளர் கண்ணியை வாங்குபு
தழீஇக் குழூஉக்களி
யானைக் கோசலன்
மகளே அழேற்கவெம்
பாவா யரும்பெறற்
றவ்வை செய்தது
பொறுவெனத் தெருளாள் கலங்கி |
|
(வாசவதத்தை மானனீகையின்
கட்டவிழ்த்து
இரங்குதல்) 144
- 149 : அவள்............பொறுவென |
|
(பொழிப்புரை) உடனே அம் மானனீகையின் கையிற் கட்டியுள்ள கட்டினை அவிழ்த்து மைதீட்டப்பெற்று நீண்ட
கண்களையுடைய அம் மானனீகையை எடுத்துத் தழுவிக்கொண்டு, "கூட்டமாகிய களிப்புற்ற
யானையையுடைய கோசல மன்னன் மகளே ! அழாதே கொள்! எம்மருமைத் தங்காய்! நின்
தமக்கையாகிய யான் செய்த தீமையைப் பொறுத்துக்கொள்!" என்று கூறி
என்க. |
|
(விளக்கம்) மைவளர் கண்ணி : மானனீகை. வாங்குபு - எடுத்து.
அழேற்க - அழாதேகொள். எம் அரும்பெறற் பாவாய் என மாறுக. பாவாய் - ஈண்டுத் தங்காய்
என்பதுபட நின்றது. செய்தது என்பது அறியாமையாற் செய்த தீமை என்பதுபட
நின்றது. |