| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 6. பதுமாபதியைக் கண்டது |
| |
கவன்றன னிருந்த காலை
யகன்று
போமின் போமி னென்றுபுடை
யோட்டும்
காவ லாளரைக் கண்டிவட் புகுதரும்
30 உரிமை யுண்டென வரிமா
னன்ன
வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு |
| |
(இதுவுமது) 27-31;
அகன்று.........துயரமொடு |
| |
(பொழிப்புரை) விலகிப்
போங்கோள்! விலகிப் போங்கோள்; என்று உரப்பிக் கூறி ஆங்குள்ள
மாந்தரைச் சேய்மையிலோட்டா நின்ற காவலாளரைக் கண்டு
இவ்விடத்தே இப்பொழுது வந்து புகுதும் உரிமைமகளிர் உளர் போலும்
என்று ஊகித்தறிந்து கொண்டு சிங்கம்போன்ற வெவ்விய
வெகுளியையுடைய தலைமகனாகிய அவ்வுதயணகுமரன் தனது நெஞ்சம் நிறைந்த
துன்பத்தோடே என்க, |
| |
(விளக்கம்) காவலர்
ஆங்குள்ள மாந்தரை விலகிப் போமின் போமின் என்று ஓட்டுதலாலே
உதயணன் இவ்விடத்தே இப்பொழுது உரிமை மகளிர் உளர்போலும்
என்று ஊகித்தறிந்தான் என்க. உரிமை-அரசனுடைய தேவி முதலிய
மகளிர், அரிமான்-சிங்கம். விடலை- தலைவன்;
உதயணன்.  : |