உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
காவல்
வேந்தன் கரைந்ததற்
கயிர்த்து மேவுகந்
துகத்தியைக் கோயிலுண்
மறைத்து மறுவி
றேவிய ரிருவரும்
வந்து திருவமர்
மார்பனைத் திறத்துளி வணங்கலிற்
|
|
(தேவியரிருவரும் உதயணன்பால்
வருதல்)
6 - 9 : காவல்............வணங்கலின்
|
|
(பொழிப்புரை) அது கேட்ட குற்றமற்ற தேவியரிருவரும் தம்மை வேந்தன் அழைத்தமைக்கு ஐயுற்றோராய்க்
கண்டோர் விரும்புதற்குக் காரணமான பந்தாட்டம் வல்லுநளாகிய மானனீகையை மட்டும்
அரண்மனைக்குள் மறைத்து வைத்தவராய்ப் பள்ளியம்பலத்திற்கு வந்து திருமகள்
வீற்றிருக்கும் மார்பினையுடைய உதயண குமரனைக் கண்டு முறைப்படி வணங்குதலாலே
என்க.
|
|
(விளக்கம்) வேந்தன் : உதயணன். கரைந்ததற்கு -
அழைத்ததற்கு. அயிர்த்து - ஐயுற்று. அஃதாவது உதயணன் ஒரோவழி மானனீகையைக் கண்டு
விரும்பியிருத்தல் கூடுமோ என்று ஐயுற்று என்றவாறு. மறு - குற்றம். திறத்துளி -
முறைப்படி.
|