உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
10 பெருகிய
வனப்பிற் பேணுந்
தோழியர்
புகுதுக வென்றலும் புக்கவ
ரடிதொழச்
சுற்றமும் பெயருஞ் சொல்லுமி
னீரென
முற்றிழை மாதரை முறைமுறை
வினவலின்
மற்றவ ரெல்லா மறுமொழி கொடுப்பக்
|
|
(உதயணன்
தோழியரை வருவித்து
வினவுதல்)
10 - 14 : பெருகிய.........கொடுப்ப
|
|
(பொழிப்புரை) உதயண மன்னன் அப் பெருந்தேவிமாரை நோக்கி "அன்புடையீர் ! மிக்க வனப்போடு நும்மைப்
போற்றும் நுந் தோழிமாரனைவரும் இப்பொழுது ஈண்டு வருவாராக!" என்று அறிவித்தமையாலே,
அவ்வரசியர் கட்டளைப்படி அத்தோழிமாரனைவரும் பள்ளியம்பலத்தே புகுந்து மன்னவன் அடி
தொழுது நிற்ப ; அரசன் அத் தோழியரைப் பார்த்து "நீயிர் நுங்கள் சுற்றத்தார்
பெயரையும், நும் பெயரையும் சொல்வீராக !" வென்று நிரம்பிய அணிகலனணிந்த
அத்தோழிமாரைத் தனித்தனியே வினவுதலாலே அத் தோழிமார் தாமும் மன்னன்
வினவிற்கெல்லாம் மறுமொழி கொடாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) புகுதுக வென்று மன்னவன் கூறலும் என்க. புக்கவர் -
புகுந்த தோழிமார். சுற்றம் - இருமுதுகுரவர் முதலியோர். மாதரை - அத் தோழிமாரை.
மறுமொழி - விடை.
|