பக்கம் எண் :

பக்கம் எண்:789

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         வாகை வேந்தன் மதித்தன னாகிக்
        கேளுடை முறையாற் கிளரொளி வனப்பின்
   50   வாசவ தத்தைக்கும் வண்ண மகளாய்
        நாளும் புனைகென நன்னுதல் பெயர்ந்தவள்
 
                 (உதயணன் செயல்)
             48 - 51 : வாகை.........புனைகென
 
(பொழிப்புரை) அதுகண்ட வெற்றிமாலையையுடைய உதயண மன்னன் அவள் மொழியை வாய்மையென்று நன்கு மதித்தவனாய்த் "தோழீ! நீ கோசலத்து அரசன் தேவியின் வண்ண மகளாகலின், அக்கோசலத் தரசன்றானும் நங்கள் வாசவதத்தைக்கு உறவினன் ஆதலின் அவ்வுரிமையால் நீ ஈண்டும் கோப்பெருந்தேவியாகிய ஒளிமிக்க அழகினையுடைய வாசவதத்தைக்கு வண்ணமகளாய் இருந்து நாள்தோறும் ஒப்பனை செய்து கொண்டிருப்பாயாக" என்று பணித்தலாலே; என்க.
 
(விளக்கம்) வாகை - வெற்றிமாலை, கேள் - உறவினன். வாசவதத்தைக்கும் என்புழி உம்மை இறந்தது தழுவி நின்றது.