பக்கம் எண் :

பக்கம் எண்:79

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           நீக்கச் சென்றனெ  னெருந  லின்றிவண்
           நீக்கப் பட்டனெ னாதலி னிலையா
           ஆக்கமுங் கேடும் யாக்கை சார்வா
     35    ஆழிக் காலிற் கீழ்மேல் வருதல்
           வாய்மை யாமென மனத்தி னினைஇ
 
           (இதுவுமது)
       32 - 36 ; நீக்க..........நினைஇ
 
(பொழிப்புரை) என்னையோ ! நேற்று எனக்குப் பிறர்
  வழிவிலக்கி விட யான் சென்றேன்! அந்நிலைமை மாறி இற்றைநாள்
  நான், பிறராலே வழியினில்லாதே! அகன்றுபோ! என்று விலக்கப்பட்டேன்.
  இங்ஙனமா தலின் இவ்வுடலின் சார்வாக வருகின்ற ஆக்கமாதல் கேடாதல்
  ஒருவர்பாலே நிலைத்து நிற்பன அல்ல ; அவை சகடக்கால் போன்று
  கீழும் மேலுமாய் மாறிவருவது வாய்மையேயாம் என்று தன் நெஞ்சத்தே
  நினைந்து என்க,
 
(விளக்கம்) நெருநல் என்றது இறந்தகால அணிமையைக் குறித்தற்கு ஒன்று
  கூறியபடியாம். நேற்று எனக்குப் பிறர். வழிவிலக்க யான் சென்றேன்;
  இன்று என்னையே பிறர் விலக்காநின்றனர். ,என்னே!
  இவ்வுலகியலிருந்தவாறு என்றிரங்கியபடியாம். இதனோடு.
  ''அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்''
  எனவரும்  நாலடியையும் (2) நினைக.