உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
நாளும் புனைகென
நன்னுதல் பெயர்ந்தவள் அடிமுதற்
றொட்டு முடியள வாகப் புடவியி
னறியாப் புணர்ப்பொடு
பொருந்தி ஓவிய ருட்கு
முருவக் கோலம் 55 தேவியைப் புனைந்தபின் மேவிய
வனப்பொடு
|
|
(மானனீகை
செயல்) 51 -
55 :
நன்னுதல்..........புனைந்தபின்
|
|
(பொழிப்புரை) அக்கட்டளை பெற்ற நல்ல நெற்றியையுடைய அம்மானன்ீகை பெருந்தேவியோடு சென்றவள்,
வாசவதத்தையின் அடிமுதல் முடியினது அளவும் இவ்வுலகின்கண் பிறர் யாரும் அறியாத வண்ணக்
கூட்டொடு பொருந்திய ஓவியர் தாமும் அஞ்சுதற்குக் காரணமான அழகிய ஒப்பனை செய்தபின்
என்க.
|
|
(விளக்கம்) கேட்டுப் பெயர்ந்தவளாகிய நன்னுதல் எனினுமாம்.
புடவி - உலகம். புணர்ப்பு - அணிகலச் சேர்க்கையுமாம். ஓவியர் - சித்திரம்
வரைவோர். உட்கு - அச்சம். உருவம் - அழகு. கோலம் - ஒப்பனை. தேவியை :
வாசவதத்தையை.
|