பக்கம் எண் :

பக்கம் எண்:80

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           நீங்கிய வெழுந்தோன் பூங்குழை மாதரை
           வண்ணக் கஞ்சிகை வளிமுகந் தெடுத்துழிக்
           கண்ணுறக் கண்டே தன்னமர் காதல்
     40    மானேர் நோக்கின் வாசவ தத்தை
           தானே யிவளெனத் தான்றெரிந் துணரான்
           மந்திர விதியி னந்த ணாளன்
           தந்தனன் மீட்டெனுஞ் சிந்தைய னாகி
           உறுப்பினு நிறத்தினும் வேற்றுமை யின்மையின்
     45    மறுத்து நோக்கு மறத்தகை மன்னன்
 
        (உதயணண் பதுமாபதியைக் காணல்)
          37-45; நீங்கிய .......,மன்னன்
 
(பொழிப்புரை) அவ்விடத்தினின்றும் நீங்கிப் போதற்
  பொருட்டு எழுந்தவன், முற்கூறப்பட்ட அழகிய குழையணிந்த
  பதுமாபதியை நிறமிக்க திரைச் சீலையைக் காற்றுத் தூக்கி விலக்கிய
  பொழுது தன் கண்ணாலே பார்த்துத் தன் விருப்பத்திற்குக் காரணமான
  காதலையுடைய. மான்போன்ற நோக்கினையுடைய வாசவதத்தையே
  இவள் என்று கருதியவனா ஆராய்ந்து நோக்கானாய்க்க காகதுண்டக
  முனிவனாகிய அவ்வந்தணனே தனது மந்திர முறைமையாலே இவ்வாறு
  வாசவதத்தையை மீட்டருளினன் என்று நினைத்தவனாய் உறுப்புக்களாலும
  நிறத்தானும்  வாசவதத்தைக்கும் இப்பதுமாபதிக்கும் வேற்றுமை காணப்
  படாமையாலே மீண்டும் நோக்காநின்ற மறவோனாகிய அவ்வுதயண
  மன்னனுடைய என்க.
 
(விளக்கம்) நீங்கிய-நீங்கற்கு, எழுந்தோன் - பெயர்.
  மாதர் பதுமாபதி வளி-காற்று. தெரிந்துணரான்-ஆராய்ந்து
  காணானாய். அந்தணாளன். காகதுண்டக முனிவன். மறுத்தும்
  மீண்டும். மன்னன் - உதயணன்.