உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
வடிவே
லுண்கண் வாசவ தத்தை
திண்டிற லரசனைச் சென்றனள்
வணங்கலும் கண்டன
னாகிக் கணங்குழை யெழுதிய
இயனோக் கினனா யியையா வாசகம்
130 தழலுறு புண்மேற் கருவி
பாய்ந்தெனக்
கலங்கின னாகி யிலங்கிழைக்
கீதோர் |
|
(மானனீகை
எழுதியதைக் கண்டு உதயணன்)
மீட்டும்
எழுதிவிடல்) 126
- 131 : வடிவேல்................கலங்கினனாகி |
|
(பொழிப்புரை) வடித்த வேல்போலும் மையுண்ட கண்களையுடைய
வாசவதத்தை மானனீகை ஒப்பனை செய்துவிட்ட உடன் அவ்வழகினையும் காட்டற்குத் திண்ணிய
ஆற்றலுடைய அரசன்பால் சென்று வணங்காநிற்ப; அம்மன்னன் அவள் நெற்றியின் மேல் அம்
மானனீகை எழுதிவிடுத்த மொழியைக் கண்டவனாய் அதன் பொருளைக் கூர்ந்துநோக்கி அதன்கண்
எழுதப்பட்டிருந்த மறுப்பு மொழிகளால் முன்பு நெருப்புச் சுட்ட புண்ணின்மேல் வேல்
நுழைந்தாற்போலப் பெரிதும் மனங்கலங்கியவனாய்; என்க. |
|
(விளக்கம்) உண்கண் - மையுண்ட கண். காண்போர் மனத்தை உண்ணுங் கண்ணுமாம். அரசன் : உதயணன்.
கணங்குழை : மானனீகை. இயல் - மொழிக்கியல்பான பொருள் என்க. இயையா வாசகம் -
மறுப்புமொழி; கருவி - படைக்கலம். |