பக்கம் எண் :

பக்கம் எண்:805

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          மான னீகை வாசவ தத்தையைத்
          தான்மறைந் தறைகுறி மேவின ளிருப்ப
 
            (மானனீகை மறைந்திருத்தல்)
           162 - 163 : மானனீகை............இருப்ப
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனுக்கு இரவுக் குறி கூறி எழுதி விடுத்த மானனீகை அவ்விரவின்கண் அவ்வாசவதத்தை தன் செயலை அறிந்துகொள்ளாதபடி மறைந்து தான் அம்மன்னனுக்குக் கூறிய இடத்தின்கண் சென்று அவன் வருகையை எதிர்பார்த்து  விதுப்புற்றிருப்ப என்க.
 
(விளக்கம்) வாசவதத்தை தன்னை அறியாமல் மறைந்து என்க. அறைகுறி - கூறிய இரவுக்குறி இடம். அஃதாவது கூத்தப்பள்ளிக் குச்சரக்குடிகை உட்பாற்படு வேதிகை என்க.