பக்கம் எண் :

பக்கம் எண்:809

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          விடுத்தவ ளேகி யடுத்தது முரைத்ததும்
          தன்னுட் பொருமலொடு தனித்தனி தெரிய
          இன்னதென் றெடுத்து நன்னுதற் குரைப்ப
 
        (காஞ்சனமாலை தான் அறிந்ததை
                    வாசவதத்தைக்கு உணர்த்தல்)
          182 - 184 : விடுத்தவள்..............உரைப்ப
 
(பொழிப்புரை) இனி வாசவதத்தையால் விடுக்கப்பட்ட காஞ்சனமாலை அம் மன்னன் சென்று மானனீகையைக் கண்டதும் கூறியதும் தன்னுள்ளே பொருமலோடு தனித்தனியே விளங்கும்படி இன்னது இன்னது என்று எடுத்து எடுத்து நல்ல நுதலையுடைய அவ் வாசவதத்தைக்கு உணர்த்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) பெயர்; காஞ்சனமாலை. பொருமல் - துன்பத்தால் நெஞ்சம் விம்முதல். நன்னுதல் : வாசவதத்தை.