உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
185 முறுவல் கொண்டு செறுவகத்
தடக்கிப்
பொறையாற் றலளா யிறையுயிர்த்
தாற்றிப் புலர்ந்த
காலை புரவலற் குறுகி
நலங்கிளர் மலர்கொண் டிறைஞ்சின
ளிருந்தியான் இரவு
கண்டே னொருகன வதனின் 190 புதுமை
கேட்கிற் புரைதீர்ந் ததுவெனச் |
|
(வாசவதத்தை
உதயணனைக் கண்டு கூறல்)
185 - 190 :
முறுவல்................என |
|
(பொழிப்புரை) வாசவதத்தை காஞ்சனமாலை கூறிய செய்தி
கேட்டுச் சினத்தைத் தன் நெஞ்சினுள்ளே அடக்கிக்கொண்டு புன்முறுவல் பூத்து அத்
துன்பத்தைப் பொறுக்கமாட்டாளாய்ச் சிறிதுபொழுது பெருமூச்செறிந்து ஒருவாறு ஆற்றியிருந்து,
பொழுது விடிந்தபொழுது மன்னவனை அணுகி நன்மைமிக்க மலர்களை அம்மன்னவன் அடியிற் றூவித்
தொழுது வணங்கி அவன் பக்கத்தே இருந்து ''மன்னர் மன்ன ! யான் கழிந்த இரவின்கண் ஒரு
கனவு கண்டேன். அக்கனவின் புதுமையைப் பெருமான் கேட்டருளின் அதனால் வரும் குற்றம்
தீர்ந்ததாம்'' என்று கூறாநிற்ப என்க. |
|
(விளக்கம்) முறுவல் - ஈண்டுச் சினச் சிரிப்பு. செறு - சினம். இறை - சிறிது பொழுது. புலர்ந்த காலை
- விடிந்த பொழுது. புரவலன் - அரசன். இரவு ஒரு கனவு கண்டேன் என மாறுக. ஒருவர் கண்ட
தீக்கனாவை நண்பர்பால் கூறின் அதன் தீமை குறையும் என்பது கனா நூற் கொள்கை. குறை -
குற்றம். அக்கனவு நின் உயர்வு தீர்ந்த கனவாம் என்றும் ஒருபொருள் தோன்றிற்று.
இதற்குப் புரை உயர்வு என்னும் பொருட்டு. |