பக்கம் எண் :

பக்கம் எண்:811

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           செவ்வாய் வெண்ணகைத் திருந்திழை கண்ட
           தெவ்வா றோவென வியம்பினன் கேட்பநின்
 
                 (உதயணன் வினவுதல்)
              191 - 192 : செவ்வாய்..........கேட்ப
 
(பொழிப்புரை) ''சிவந்த வாயையும் வெளிய பல்லினையும் திருந்திய அணிகலனையு முடைய கோமகளே! நீ கண்ட கனவு எப்படியோ?'' என்று கூறி வினவாநிற்ப என்க.
 
(விளக்கம்) திருந்திழை : வாசவதத்தை ; விளியேற்று நின்றது.