பக்கம் எண் :

பக்கம் எண்:815

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          ஆனா நினைவுட னகறர வேந்தன்
    215    தேவியை யையந் தெளித்தன மொருவகை
          யாரு மில்லென வினிதிருந் துவப்பப்
          பானுவுந் தேரொடு படுவரை யிடைபுக
 
                (உதயணன் செயல்)
              214 - 217 : வேந்தன்.........புக
 
(பொழிப்புரை) தன் மொழியை இப்பேதை வாய்மை என்றே கொண்டனள் என்று கருதிய உதயணன் யாம் ஒரு வகையால் தேவியின் ஐயத்தைத் தீர்த்துத் தெளிவித்தேம். இனி இதுபற்றி ஐயங் கொள்வோர் யாரும் இல்லை என்று மானனீகையின் நினைவோடு இனிதே இருந்து மகிழா நிற்பவே கதிரவனும் தன் தேரோடு மேலை மலையை அடைந்தானாக என்க.
 
(விளக்கம்) ஒருவகையால் ஐயம் தெளித்தனம் என்க. இனி ஐயுறுவார் யாரும் இல்லை என்று கருதி என்க. பானு - கதிரவன். வரை - மலை.