உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
மான னீகையைக் காவல்வைத்
தனளாய்
மாந்தளிர் மேனியுங் காஞ்சன மாலையொடு
220 நேர்ந்தவக் குறியிற் றான்சென்
றிருப்ப
|
|
(வாசவதத்தையின்
செயல்)
218 - 220 : மானனீகை...........இருப்ப
|
|
(பொழிப்புரை) கதிரவன் மறைந்த பின்னர் மாந்தளிர்
போலும் நிறமுடைய வாசவதத்தை நல்லாள் அம்மானனீகையைச் சிறையில் அடைத்துக் காவல்
வைத்தவளாய்த் தன் தோழியாகிய காஞ்சன மாலையோடே சென்று அம்மானனீகை குறிப்பிட்ட
அக்கூத்தப்பள்ளி மேடைமீது அம்மானனீகைக்கு மாறாக இருளின்கண் தானே சென்றிராநிற்ப
என்க.
|
|
(விளக்கம்) மாந்தளிர் மேனி : வாசவதத்தை. நேர்ந்த அக்குறி - மானனீகை மன்னனுக்கு நேர்ந்த
குறியிடம் ; என்றது கூத்தப்பள்ளி வேதிகையை. தான் சென்றிருப்ப என்றது தன்னோடு வந்த
காஞ்சன மாலையை வேறிடத்தே மறைத்து வைத்துத் தான் மட்டுமே சென்றிருப்ப என்பதுபட
நின்றது.
|