| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 13. முகவெழுத்துக் காதை |
| |
அதற்கொரு வழியான் மனத்தினு
மில்லெனத்
தெளித்த நிலைமையுந் தெளிந்திலை
யேயெனப்
பெயரப் பெயர முறைமுறை
வணங்கி
இயனிலை மான னீகா யருளென்
245 றடுத்தடுத் துரைப்பவு மாற்றா
னாகவும்
இதச்சொற் சொல்லவும் வணக்கஞ்
செய்யவும்
பெட்ப வருதலிற் பிடித்தல்
செல்லாள்
|
| |
(இதுவுமது)
241 - 247 : அதற்கு...........வருதலின்
|
| |
| (பொழிப்புரை) 'அங்ஙனம் கூறி ஐயுற்ற அவள் ஐயத்தைப்
போக்குதற்கு ஒரு வழியாக அத்தகைய எண்ணந்தானும் என் மனத்தினும் இல்லை என்று கூறி யான்
அவளைத் தெளிவித்த செய்தியையும் நீ தெளிந்தாய் இல்லையே!' என்று கூறிக்கொண்டு
அவள் விலகுந்தோறும் விலகுந்தோறும் முறை முறையே வணங்கி 'அழகின் இருப்பிடமே!
மானனீகாய்! அளியேனுக்கு அருள் செய்க! என்று அடுத்தடுத்துக் கூறவும், ஆற்றான் ஆகவும்,
இன்பந்தரும் நன்மொழி பற்பல நவிலவும் வணக்கஞ் செய்யவும் தன்மேல் மிகவும் நெருங்கி
வருதலாலே என்க.
|
| |
| (விளக்கம்) பெயரப்பெயர - அவள் விலகுந்தோறும் விலகுந்தோறும். இயல்நிலை - அழகின் உறையுளே ;
விளி. இயல் - அழகு. இதச்சொல் - இன்பம் தரும்
சொல்.
|