உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
பெட்ப வருதலிற் பிடித்தல்
செல்லாள் நக்கன
ளாகி மிக்கோய் கூறிய
மானுந் தேனு மான னீகையும்
250 யானன் றென்பெயர் வாசவ
தத்தை
காணெனக் கைவிட் டோடின னோடி
|
|
(வாசவதத்தையின்
செயல்)
247 - 251 : பிடித்தல்.........காணென
|
|
(பொழிப்புரை) அவ்வாசவதத்தை தன் கொள்கையைக்
கடைப்பிடித்தல் இயலாதவளாய்ப் பொள்ளென நகைத்துப் 'பெரியோய்! நீ கூறிய ''மானும்
தேனும் மானனீகையும்'' யான் அல்லேன்காண். என் பெயர் வாசவதத்தை கண்டாய்!' என்று
திருவாய் திறந்து கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) பெட்ப - மிக. பிடித்தல் - கடைப்பிடித்தல். மிக்கோய் என்றது இகழ்ச்சி. நான்
மானும் அல்லேன், தேனும் அல்லேன், மானனீகையும் அல்லேன், என் பெயர் வாசவதத்தை என்று
சினந்து கூறியவாறு.
|