| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 13. முகவெழுத்துக் காதை |
| |
காணெனக் கைவிட் டோடின னோடி
அடுத்த காட்சியிற் றனித்தொரு
மண்டபத்
தொளித்தன னாகித் திகைத்தன
னிருப்பச்
|
| |
(உதயணன்
செயல்)
251 - 253 :
கைவிட்டு..........இருப்ப
|
| |
| (பொழிப்புரை) வாசவதத்தையின் குரல் கேட்ட அளவிலே
மன்னன் அவளைக் கைவிட்டு விரைந்து ஓடினன். அங்ஙனம் ஓடியவன் அடுத்துள்ள அழகிய ஒரு
மண்டபத்தினுட் புகுந்து ஒளிந்தவனாய் மனந் திகைத்திராநிற்ப
என்க.
|
| |
| (விளக்கம்) காட்சி - அழகு. மண்டபத்துத் தனித்து ஒளித்தவனாய்
என்க.
|