(பொழிப்புரை) இவ்வாற்றால் சினங்கொண்டு சென்ற
கோப்பெருந்தேவி தன் மாளிகையில் சிந்தனையோடு சிறிது பொழுது உறையா நிற்பவே
அவ்விரவும் புலர்ந்து உலகமும் பொலிவுற்றது என்க.
(விளக்கம்) பெயர்ந்தவள் : வாசவதத்தை. கங்குல் புலர்ந்தது உலகம் பொலிந்து தோன்றிற்று என
வருவித் தோதுக.