பக்கம் எண் :

பக்கம் எண்:825

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
          மறையக் கண்ட வயந்தக னவ்வயின்
          விரைவிற் சென்று வேந்தைத் தேட
 
         (வயந்தகன் உதயணனைத் தேடுதல்)
               8 - 9 : மறைய.......தேட
 
(பொழிப்புரை) கோப்பெருந்தேவியின் சினத்தையும் செயலையும் தன்னை அவள் அறியாமல் ஒளிந்து நின்று கண்டு வயந்தகன் அப்பொழுதே விரைவாகச் சென்று அவ்வரண்மனைக்குள்ளே அரசனைத் தேடாநிற்ப; என்க.
 
(விளக்கம்) மறையக் கண்ட - அவள் அறியாமல் தான் மறைய நின்று கண்ட. வேந்து : உதயணன்.